தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்க செய்யும் பொருட்டு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், தருமபுரி அவர்களின் தலைமையிலான குழுவினரால் தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா ! பெண்ணா ! என கண்டறிந்து தெரிவித்த கும்பலை 02.02.2024-அன்று தருமபுரி மாவட்டம், பரிகம் கிராமத்திலும், 28.06.2024-அன்று நெக்குந்தி கிராமத்திலும், 25.07.2024-அன்று பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்திலும், 13.08.2024-அன்று பாலக்கோடு, மாரண்டஅள்ளி சீங்கேரி கூட்ரோடு கிராமத்திலும் கையும் களவுமாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த முருகேசன் (வயது-45) சின்னராஜ் (வயது-29) மற்றும் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியைச் சார்ந்த கற்பகம் (வயது-39) ஆகியோர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா! பெண்ணா! என கண்டறிந்து தெரிவிப்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் எவராயினும் உடனடியாக PCPNDT Act-1994 மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

.jpeg)