முப்படைகளில் பணிபுரிந்து அவில்தார் மற்றும் அதற்கு இணையான தகுதி பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு கேந்திரிய சைனிக் போர்டு மூலம் ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் 01-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற தங்களது சிறார்களுக்கு கேந்திரிய சைனிக் போர்டு மூலம் கல்வி உதவித் தொகை ரூ.12000/- வழங்கப்பட்டு வருகின்றன என்பதால் இந்நிதியுதவிக்கான விண்ணப்பத்தை www.ksb.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்திடுமாறும் அவ்வாறு பதிவு செய்த online விண்ணப்பத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpeg)