Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாலக்கோடு அரிமா சங்கம், தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந் கண்மருத்துவமனை ஆகியவை இனைந்து கண் சிகிச்சைமுகாம் அரிமா சங்க தலைவர் கேசவராஜ் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு அரிமா சங்க நிர்வாகிகள் முத்து, கோவிந்தசாமி, பச்சியப்பன், நாகராஜ், சீனிவாசன், பாலாஜி, சக்திவேல், ராமசாமி, ராஜாமணி, கிரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரிமா சரவணன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.

 

இம்முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்தநோய், குழந்தைகளின் கண் நோய், மாலைக்கண் நோய், தூரப் பார்வை, கிட்ட பார்வை, கண்களில் தானாக நீர் வடிதல், மாறுகண் ,  உள்விழிலென்சு  உள்ளிட்ட கண் சம்மந்தமான நோய்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்தனர்.


இம்முகாமில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 600  பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 230 கண்புரை நோயாளிகளின் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இம்முகாமில் அரிமா சங்கத்தினர், மத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies