தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னாறுஅணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கமலா (32). இவர்கள் வீட்டின் முன்பு ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது ஓட்டலுக்கு காரில் 4 பேர் வந்தனர்.
அவர்கள் கடையில் இருந்த கமலாவிடம், 2 சாப்பாடு மற்றும் கல் மீன் பார்சல் செய்து தருமாறு கேட்டனர். அப்போது ஒருவர் கழிவறைக்கு செல்வதாக கூறி வீட்டிற்குள் சென்றார். பின்னர் அவர்கள்பார்சல் சாப்பாடுகளை வாங்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து கமலா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. கடைக்கு வந்த நபர்கள், நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சப் பள்ளிபோலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpeg)