கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைத்து வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது வெளியேற்றப்படுவதாலும்.
நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கனமழை காரணமாக கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலுவில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது இந்த நீர் வரத்து காரணமாக நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து நீடித்து வருகிறது.
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்தானது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 27வது நாளாக தடையை நீட்டித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து முப்பதாயிரம் கனஅடியாக அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

