தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தருமபுரி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவின் (2024-2025) ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 72 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு 2024-2025 தருமபுரி மாவட்டம், விருபாட்சிபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக கூடுதல் கட்டிடம் கட்டுமான பணிகள், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிரசிகிச்சை மைய கட்டிடம், கே.நடுஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியியல் நிலையத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிய மனு, பென்னாகரம் புதிய பேருந்து நிலையம், பென்னாகரம் வார்டு-1ல் மின் கம்பங்கள், மின் விளக்குகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகள், பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி மற்றும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க கோரிய மனு, அதகபாடி தான்தோன்றீஸ்வர் கோயிலை சீரமைக்க கோரிய மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மனுக்கள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தே.மதியழகன் (பர்கூர்), திரு.சௌந்திரபாண்டியன் (லால்குடி), திரு.கு.சின்னப்பா (அரியலூர்), திரு.ஒ.ஜோதி (செய்யாறு), திரு.மு.பாபு (செய்யூர்) ஆகியோர் இன்று (21.08.2024) ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு துணைச் செயலாளர் திரு.கோ.கணேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு சார்பு செயலாளர் திரு.க.சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழுவினர் தருமபுரி மாவட்டம், விருபாட்சிபுரம் ஊராட்சியில் ரூபாய் 36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கட்டடமானது தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 46,502 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, பூச்சு மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிபிட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும், தருமபுரி ஒன்றியம், கே. நடுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுமான பணிகளையும் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தினையும் ஆய்வு செய்தனர். பின்னர், பென்னாகரம் ஊராட்சிக்குட்பட்ட சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியியல் நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழுவினர் பென்னாகரம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில், பென்னாகரம் பேருந்து நிலையம் ரூபாய் 4 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளான உணவு விடுதி, கடைகள், பயணிகள் ஓய்வறை, பொதுகழிப்பிடம், உயர் மின்கோபுர விளக்கு ஓடுதளம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தனர். பென்னாகரம் வார்டு-1ல் மின் கம்பங்கள், மின் விளக்குகள் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி மற்றும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் இருக்க கோருதல் குறித்தும், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் நலப்பிரிவு கட்டிடம் தரைதளம் 3 தளங்களுடன் மொத்தம் 2,777 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அதகப்பாடி தான்தோன்றீஸ்வர் கோயில் சீரமைக்க கோரி வழங்கப்பட்ட மனுவின் அடிப்படையில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, மனுதாரர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தான்தோன்றீஸ்வர் கோயில் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர்.
பின்னர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தருமபுரி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவின் (2024-2025) ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., மனுக்கள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தே.மதியழகன் (பர்கூர்), திரு.கு.சின்னப்பா (அரியலூர்), திரு.ஒ.ஜோதி (செய்யாறு), திரு.சௌந்திரபாண்டியன் (லால்குடி), திரு.மு.பாபு (செய்யூர்) ஆகியோர் முன்னிலையில் இன்று (21.08.2024) நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு துணைச் செயலாளர் திரு.கோ.கணேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு சார்பு செயலாளர் திரு.க.சந்தானம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), திரு. ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.வே.சம்பத்குமார் (அரூர்) ஆகியோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டப்பேரவை மனுக்கள் குழு இன்று தருமபுரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுநலம் சார்ந்து பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தொடர்பான கள ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை குழுக்களில் மனுக்கள் குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனுக்கள் குழு பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்து, பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய குழுவாக செயல்படுகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அறிக்கைகள் பெறப்பட்டு இன்று தெரிவு செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2024-2025 வருகை குறித்து ஏற்கனவே பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பொது நலன் சார்ந்த 145 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில், 33 மனுக்கள் ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, மனுக்கள் குழுவால் பெறப்பட்ட 33 மனுக்களும், 4 மறுஆய்வு மனுக்கள் என மொத்தம் 70 மனுக்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது மனுதாரர்களுக்கு இன்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் 7 இருளர் இன மக்களுக்கு தலா ரூபாய் 5 இலட்சத்து 7 ஆயிரம் வீதம் ரூபாய் 35 இலட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டிலும், 6 பழங்குடியினருக்கு பழங்குடியினர் நல நிதியுதவியின் மூலம் தலா ரூபாய் 5 இலட்சத்து 20 ஆயிரம் வீதம் ரூபாய் 31 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும் கட்டிமுடிக்கப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளும், வருவாய்த்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூபாய் 5 இலட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் என மொத்தம் ரூபாய் 72 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா / திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்எஸ்.மகேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட வன அலுவலர் திரு.ராஜாங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையத் முகைதீன் இப்ராஹிம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. சிவக்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. அமுதவல்லி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. சாந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.குணசேகரன், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திரு.கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. நாகேந்திரன், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, செல்வி.கார்த்திகா, வட்டாட்சியர்கள் திரு.சண்முகசுந்தரம், திருமதி.லட்சுமி, திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.செந்தில்குமார், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் திரு. வீரமணி, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் முதல்வர் திருமதி.மா.வெண்ணிலா, பேராசிரியர் மரு.சிவக்குமார், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், சட்டமன்ற பேரவை குழு அலுவலர்கள், மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)