கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் வரவேற்று பேசினார். இக்கூட்டத்திற்க்கு சமூக நீதி பேரவை மாநில தலைவர் பாலு, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் மொய்தீன், பசுமை தாயக மாநில துணை பொது செயலாளர் பொன்மலை, மாநில துணைத் தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட அவை தலைவர் கே.இ.கிருஷ்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்களாக தலைவர், செயலாளர், மற்றும் மகளிர் அணி தலைவர், செயலாளர் ஆகியோரை நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, மேலும் தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் பூத்வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 75 தொண்டர்கள் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்ற விருப்ப மனு அளித்தனர். மனுவை பெற்ற கொண்ட மாவட்ட செயலாளர் எஸ். பி . வெங்கடேஷ்வரன் எம்.எல். ஏ அனைத்தும் மனுக்களும் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பிணர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பிணர் வி.எம்.சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், நகர செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் துரை, சரவணன், முருகன், குமார், சிலம்பரசன், சக்திவேல், ஏழு குண்டன், மாதையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் சரவனகுமாரி நன்றி தெரிவித்தார்.

