Type Here to Get Search Results !

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வுசெய்தார்.


தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் கடந்த 18.12.2023 அன்று பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்த்தை தொடர்ந்து, இதுவரை 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.


நகரப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை நடைமுறைப்படுத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரியில் கடந்த 11.07.2024 அன்று தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.


அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று (15.07.2024) தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு வின்சென்ட் திருமண மண்டபத்திலும், ஏரியூர் வட்டாரத்திற்குட்பட்ட சுஞ்சல்நத்தம், நாகமரை பஞ்சாயத்துகளுக்கு ஏரியூர் பொன்னப்பகவுண்டர் திருமணமஹாலிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட சித்தேரி பஞ்சாயத்திற்கு சித்தேரி சமுதாய கூடத்திலும், பென்னாகரம் வட்டாரத்திற்குட்பட்ட சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, கலப்பம்பாடி, மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துகளுக்கு கலப்பம்பாடி VPRC கட்டிடத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம் பஞ்சாயத்துகளுக்கு ஏ.ஜெட்டிஅள்ளி சமுதாய கூடத்திலும், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட பிக்கனஅள்ளி, வெள்ளிசந்தை, ஜக்கசமுத்திரம், வெள்ளிசந்தை, திம்மராயணஹள்ளி பஞ்சாயத்துகளுக்கு பிக்கனஅள்ளி VPSC கட்டிடத்திலும் “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 


இம்முகாம்களில் கிராமப்புற மக்களுக்கு 15 அரசு துறைகள் மூலம் 44 வகையான சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (15.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 2560 மனுக்கள் வரப்பெற்றன. இம்முகாம்களில் பெறப்படும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதோடு, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொண்டுள்ளார்.


இச்சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் முதலமைச்சர் காப்பீடு அட்டை வேண்டி மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு, இன்றைய தினமே முதலமைச்சர் காப்பீடு அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.சுதா ரமேஷ், துணைத்தலைவர் திருமதி.வித்யா வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies