Type Here to Get Search Results !

பாலக்கோடு மார்கெட்டிற்கு தொடர்ந்து தக்காளி வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


தர்மபுரிமாவட்டம்,  பாலக்கோடு , காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வருகின்றனர். இதன் மூலம்  தினசரி சராசரியாக 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டு, உள்ளூர் தேவைக்குப்போக தென்மாவட்டத்திற்க்கும் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.


கடந்த சில  மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்படைந்துள்ளது, மேலும் தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள், கோயில் திருவிழாக்கள் பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தக்காளியின்  விலை கிடு கிடுவென  உயர்ந்து தக்காளி மார்க்கெட்டில் 15 கிலோ எடைகொண்ட கூடை தக்காளி 970ரூபாய்க்கும்  ஒரு கிலோ தக்காளி 65ரூபாய்க்கும்,  உழவர் சந்தையில் 58 ரூபாய்க்கும், சில்லறை விற்பனைகடைகளில் ஒரு கிலோ 80 ரூபாய் வரையிலும்   விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் தக்காளி சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தக்காளி விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies