Type Here to Get Search Results !

பி.கொல்ல அள்ளி கிராமத்தில் குடிப்பதை தட்டி கேட்டதால் தந்தையை கத்தியால் குத்தி கொலை முயற்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி (வயது. 60) இவரது மகன் முனியப்பன் (வயது.38) கூலி தொழிலாளி, இவருக்கு திருமனமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

முனியப்பன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு  மனைவியிடம் தகராறு செய்ததால் மனைவி கோபித்துக் கொண்டு நலப்பநாயக்கனஅள்ளியில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு  குழந்தைகளுடன் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு சென்று விட்டார். இந்நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு வழக்கம் போல் முனியப்பன் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார். இதனை அவரது தந்தை சின்னசாமி கண்டித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் எல்லாவற்றிற்க்கும் நீதான் காரணம் என கூறி அருகில் இருந்த பாறாங்கல்லை தூக்கி தந்தையில் கால் மீது போட்டதில் கால் முறிந்தது. அப்போதும் ஆத்திரம் தீராத சின்னசாமி  கத்தியால் வயிற்றின் மேற்புறம் குத்தியுள்ளார், இதில் பலத்த காயமடைந்து அலறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முனியப்பனை தேடி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies