தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பேரூராட்சியில் உள்ள எம்ஜி ரோடு, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஅள்ளி மேம்பாலம் வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகளால் மற்றும் ஆட்டோக்கள், மினிலாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள், அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
மேலும் எம்ஜிரோடு பகுதியிலும், பேருந்து நிலையம் பகுதியிலும் காலை முதல் இரவு வரை இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லுவதில் கூட சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக