Type Here to Get Search Results !

காணாமல் போன சிறுவனை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்.


தருமபுரி அருகேயுள்ள வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் மாது சசிகலா  என்பவரின் மகன் அஜய் (வயது.17) இவர் சற்று மன நலம் பாதிப்படைந்தவர். நேற்று மாலை வீட்டிலிருந்து திடிரென காணாமல் போனார், தருமபுரி காவல்  நிலையத்தில்  கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்து, சிறுவனை தீவிரமாக தேடி வந்த நிலையில் வாட்ஸ்அப் தளத்தில்  வந்த செய்தியை பார்த்த பாலக்கோடு ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை கண்டறிந்துள்ளனர்

இன்று காலை பாலக்கோடு பை பாஸ் சாலை பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை கண்டு பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுவனை பத்திரமாக மீட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாய் சசிகலா விடம் சிறுவனை ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அதற்கு உறுதுனையாக இருந்து பாலக்கோடு காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies