Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே கோர்ட் ஆர்டரை பிழை இல்லாமல் படித்த 91 வயது மூதாட்டி அசந்துபோன போலீஸ் அதிகாரிகள்.


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே வத்தல்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்மாள் 91 வயதான  இவருக்கு ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் வீட்டின் அருகே உள்ள இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலையின் மனைவி சந்திரா என்பவர்   குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் இருவருக்கும் நீண்ட நாட்களாக இந்த குடிசை வீட்டை காலி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து பென்னாகரம் தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் ஆறுமுகம்மாள் மனு அளித்துள்ளார் .இந்த நிலையில் சந்திரா இந்த இடம் தமக்கு சொந்தம் என கூறுகிறார் .இந்நிலையில் பென்னாகரம் டிஎஸ்பி. மகாலட்சுமி தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அரசு அலுவலர்கள் முன்னிலையில் குடியிருக்கும் இடத்தை அளவீடு செய்ய வந்தவர்களை ஆறுமுகம்மாள் தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.  


இதில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொழுது அதிகாரிகள் முன்னணியில் ஆறுமுகத்தம்மாள் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை பிழையில்லாமல்  போலீசார் மற்றும் அளவீடு  செய்ய  வந்த அதிகாரிகளிடம் படித்து காட்டி அசத்தினார்.இவர் 1946 ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்புவரை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கண்ட அரசு அதிகாரிகள்  வயதான மூதாட்டி பேச்சைக் கேட்டு பொதுமக்களும் அதிகாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிறகு அதிகாரிகள் இருதரப்பினர்களையும் அழைத்து  பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மற்றோரு நாள் அளவீடு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies