தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதியில் சூதாடுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பஞ்சப்பள்ளி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ராமன் கொட்டாய் கிராமத்தில் மரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் ஏரி பஞ்சப்பள்ளியை சேர்ந்த முரளி (வயது.40) முனுசாமி(வயது. 70) கரகூரை சேர்ந்த வடிவேல்(வயது.40) சண்முகம் (வயது.47) பட்டாபி நகரை சேர்ந்த ராஜா(வயது.49), புளியந்தோப்பை சேர்ந்த முருகன்(வயது. 57), நமாண்டஅள்ளியை சேர்ந்த கார்த்திகேயன்(வயது.43) ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்கள் மற்றும் 2 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.