Type Here to Get Search Results !

கல்கூடப்பட்டி மேம்பாலம் அருகே சூதாடிய 6பேர் கைது; 320 ரூபாய் பணம் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கல்கூடப்பட்டி மேம்பாலம் அருகே சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், கல்கூடப்பட்டியை சேர்ந்த குப்புசாமி (வயது.41), சின்னசாமி (வயது.41), அபிமண்ணன் (வயது.26), சஞ்சீவராயன் (வயது.32), ரமேஷ் (வயது.26), ராஜா (வயது.26) எனவும் இவர்கள் பொது இடத்தில் சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. 6 பேரையும் கைது செய்த போலீசார்  அவர்களிடமிருந்து சீட்டு கட்டுக்கள் மற்றும் 320 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies