கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 5500 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நீர்வரத்து நான்காயிரம் கன அடியிலிருந்து தொடங்கி நேற்று 5 ஆயிரம் கனஅடியாகவும் இன்று ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து 5500 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து காணப்படுகிறது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது . தண்ணீர் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக