பாலக்கோடு இரயில்வே நிலையம் முன்பு 3 புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் இரயில் மறியல் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜூலை, 2024

பாலக்கோடு இரயில்வே நிலையம் முன்பு 3 புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் இரயில் மறியல் போராட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு இரயில் நிலையந்தில் முன்பு பாலக்கோடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 புதிய கிரிமினல் சட்டங்களை  எதிர்த்து வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கில் குப்பன் செயலாளர் பாலமுரளி தலைமையில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது.


இந்த போராட்டத்தில் பழங்கால ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முக்கிய கிரிமினல் சட்டங்களை  நீக்கிவிட்டு, ஒன்றிய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாட்சிய அதினியம், அதாவது இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 புதிய கிரிமினல் சட்டங்களை இயற்றி  ஜூலை-1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. 


இந்த புதிய  சட்டம் பொதுமக்களையும் வருங்கால தலைமுறையையும்,  கடுமையாக பாதிக்கும்  எனவும், மேலும் பொது மொழியான ஆங்கில மொழியில் பெயர் வைக்காமல், வடமொழியை புகுத்தும் வகையில்  புதிய சட்டத்திற்க்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளது, இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு இந்தியாவை வேறு பாதைக்கு அழைத்து செல்ல விரும்புவதை தெளிவாக்குகிறது.


எனவே இச்சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் இரயில் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் ரெயில் நிலையம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சீனிவாசன், சரவணா, செந்தில், சேகர், முனுசாமி, ராஜேந்திரன், நல்லதம்பி, நீலமேகம், வள்ளிநாயகி, புனிதா, உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். வழக்கறிஞர் பச்சைஆச்சாரி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad