தருமபுரியில் கடந்த 2013ம் ஆண்டு நத்தம் நாய்க்கன்கொட்டாய் கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற சாதி கலவரத்தில் உயிரிழந்த இளவரசனின் 11ம் ஆண்டு நினைவு தினம் விசிக சார்பில் அனுசரிக்கப்பட்டது, இதில் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன் ஜெயந்தி தருமபுரி தொகுதி செயலாளர் சமத்துவன் (எ) சக்தி தொண்டரணி மாநில துணை செயலாளர் முத்துகுமரன் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மாராவாடி மு.செந்தில் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் அரூர் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி பார்த்திவளவன் கண்ணதாசன் ஜேபாளையம் பழனி.தமிழ் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இளவரசன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.