தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கலெக்டர் சாந்தி அவர்களின் ஆலோசனையின் படி, வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப் பட்டி நெடுஞ்சாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகேந்திரமங்கலம் அருகே அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்ததில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 ஜே.சி.பி வாகனத்திற்க்கு தலா 30 ஆயிரம் வீதம் 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது,
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி சென்ற 2 மினி சரக்கு லாரி, மற்றும் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற 3 பள்ளி பேருந்துகள் என 5 வாகனங்களும் தலா 10 ஆயிரம் ரூபாய் என 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, இந்த வாகன சோதனையில் மொத்தம் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 2சரக்கு லாரிகளையும் பறிமுதல் செய்து மகேந்திர மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
சட்டத்திற்கு புறம்பாக சாலை விதிமுறைகளை மீறி சரக்குஆட்டோ, மினி லாரிகளில் பயணிகளை ஏற்றி சென்றாலோ, செல்பேசி கொண்டு வாகனங்களை இயக்கினாலோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் எச்சரித்துள்ளார்.


