Type Here to Get Search Results !

ஆசிரியரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த பள்ளி மாணவர்கள்.


தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம் , கோடிஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர்  கா.சாந்தலிங்கம்


கடந்த 15.07.24 அன்று இட மாறுதலாகி வேறொரு பள்ளிக்கு செல்ல ஆயத்தமானார். இதையறிந்த அப்பள்ளி மாணவர்கள் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு அதிர்ச்சியோடும் ஆதங்கத்தோடும் அழுதுபுலம்பினர்.


நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது. எங்கள் பள்ளியிலே தொடர்ந்து பணியாற்றுங்கள் என்று கதறி கண்ணீரோடு கேட்டுகொண்டது சுற்றியிருந்த தலமை ஆசிரியை உட்பட ஏனைய ஆசிரியர்களை நெகிழச்செய்தது.


ஆசிரியரை பற்றி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியை கூறும்போது அறிவியல் ஆசிரியர் எப்போதும் காலம் தவறாமையை கடைபிடிப்பதும்,பள்ளி குழந்தைகளிடம் மிகவும் அன்பாகவும் குழந்தைகளுக்கு மிக எளிதாக புரியும்படியும் சொல்லிகொடுப்பார் என்றும் பள்ளி குழந்தைகள் ஒவ்வொருவரையும் தன் குடும்ப பிள்ளைகளை போல நினைத்து அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார் என்றும் அவர் இடமாறுதலில் செல்வது இப்பள்ளிக்கு பேரிழப்பு என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சுற்றியிருந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களை பெரிதும் கவலையடையச்செய்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies