தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூன், 2024

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /  மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசால் தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 63 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 

வ.எண்

விடுதியின் விவரம்

மாணவர்களுக்கானது

மாணிவியர்களுக்கானது

1.

பள்ளி விடுதிகள்

27

23

2.

கல்லூரி விடுதிகள்

8

5

மொத்தம்

35

28

              மொத்தம்                                     63

மாணவர்/ மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். 


விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன, அனைத்து விடுதி மாணவ/மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 


10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டு தோறும் பாய்களும் வழங்கப்படும்.


விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:-

  1. பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு
  2. குறைந்தபட்சம்  8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
  3. தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி
  4. காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளியினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 14.06.2024-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளியினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2024 -க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.


மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


எனவே பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர்கள் அரசின்  இச்சலுகைகளை பெற்று, பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->