Type Here to Get Search Results !

ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு.


இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


இது குறித்த விபரங்களுக்கு பின்வரும் முகவரியில் செயல்பட்டு வரும் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். 


மண்டல துணை இயக்குநர்,

ஜவுளி துறை,

#1A-2/1, சங்கரி பிரதான சாலை,

குகை, சேலம் - 636 006,

மின்னஞ்சல் முகவரி- ddtextilessalemregional@gmail.com

தொலைபேசி எண். 0427-2913006


என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies