அதில் 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. கடைசி நாளான இன்று வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில், 87 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது பிக்கனஅள்ளியை சேர்ந்த வீடில்லாத ஏழை எளிய மக்கள் அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவிற்க்கு கடந்த 6 வருடமாக இடத்தை அளந்து தரவில்லை என்றும் எனவே இடத்தை அளந்து தர கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்டவர் உடனடியாக தாசில்தார், வி.ஏ.ஓ, சர்வேயருடன் பிக்கனஅள்ளி கிராமத்திற்க்கு சென்று நிலத்தை 43 பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்தார். மனு அளித்த சில மணி நேரங்களிலேயே விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஆறுமுகம், ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி,துணை தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர்கள் வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

.jpeg)