Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டியினை முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொ.மாதப்பன் அவர்கள் தலைமை ஏற்று போட்டியினை தொடங்கி வைத்தார்.


இப்போட்டிக்கு தலைமை ஆசிரியர் லட்சுமணன்,  ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், வெங்கட்டன், வஜ்ஜிரவேல் உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஹாக்கி வீரர்களுக்கு கைலுக்கி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.


இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சுழல் கோப்பையும், பரிசு தொகையும்  வழங்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies