Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதி பொதுமக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு தாசில்தார் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றார். சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்டி கொள்ள தமிழக அரசு  சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் பட்டா வழங்கிய  இடத்தை இதுவரை அளவீடு செய்து வழங்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலக்கோடு தாசில்தாரிடம், குடி இருக்க இடமில்லை, வீட்டுவாடகை கட்ட முடியவில்லை, எனவே  பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு முறையிட்டனர். அதனை தொடர்ந்து  சர்வேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் ஆறுமுகம்,  இலவச வீட்டுமனைபட்டா வழங்கிய இடத்தை  உடனடியாக அளந்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,


அதனைதொடர்ந்து முதற்கட்டமாக சர்வே எண் 329, 330 ஆகிய 2 சர்வே எண்களில் வழங்கப்பட்ட 187 பட்டாக்களுக்கு  தாசில்தார் ஆறுமுகம், வி.ஏ.ஓ.குமரன் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தினை அளவீடு செய்து வழங்கி வருகின்றனர்.


நாளைக்குள் 187 பயனாளிகளுக்கும் நிலம் அளவீடு செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோரிக்கையை ஏற்று உடனடி நிலத்தை அளவீடு செய்து வழங்கிய வருவாய் துறையினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies