Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பைக் மீது சொகுசு கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், விருபாட்சிபுரத்தில் வசித்து வருபவர் விக்னேஷ் (வயது.25) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ஓசூரிலிருந்து தனது பைக்கில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.


காடுசெட்டிப்பட்டி நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அனுகு சாலையில் இருந்து எதிரே வந்த சொகுசு கார் விக்னேஷ் பைக் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies