Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே முனியப்பன் கோவில் உண்டியலில் ரூ 90 கோடிக்கு செக்; கடவுளுக்கே அதிர்ச்சி கொடுத்த பக்தர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முனியப்பன் கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூபாய் 90 கோடிக்கு செக் காணிக்கையாக போட்டதால் கோவில் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி அக்ரஹரத்தில் முனியப்பன் கோவில் உள்ளது.இந்த கோவில் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் மாதத்திற்கு ஒரு முறை அன்னதான உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் உண்டியல் காணிக்கை என்னும் பணி நல்லம்பள்ளி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் தனுசூர்யா,செயல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடந்தது. 


அப்போது  உண்டியல் காணிக்கை என்னும் போது பக்தர் ஒருவர் அளித்திருந்த இரண்டு செக்  உண்டியல் காணிக்கையில் இருந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்ததில்  ஒரு செக் எழுதப்படாமலும் மற்றொன்று எடுத்துப்  பார்த்ததில் ரூ 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர், கோவில் வரலாறுலே இதுவரை இல்லாத வகையில் பக்தர் காணிக்கை செலுத்தியுள்ளது என்பதால் மகிழ்ச்சி  அடைந்த கோவில் நிர்வாகிகள் இன்று கோவிலின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளனர்.


பக்தர் காணிக்கையாக செலுத்திய செக்கை வங்கி கணக்கில் செலுத்திய பின்னரே அவரின் கணக்கில் பணம் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும். கோவில் உண்டியலில் 90 கோடிக்கு செக் செலுத்திய நபரின் செயலால் பக்தர்களும் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies