Type Here to Get Search Results !

காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்தநாள் விழா காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்ச்சியில் ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் மலர் தூவி மரியாதை செய்தார், மேலும் தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ மணி அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மேலும் ஒன்றிய அவை தலைவர் முனுசாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகம்,புலிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், யுவராஜ், மு.தலைவர் சிவாஜி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சக்தி, சிதம்பரம், கவுன்சிலர் குமார், சண்முகம்,  சின்னசாமி, முனிராஜ், காடு மணி, மதகேரி கணேஷ், பிரபாகரன், முனிராஜ், ராஜா, குமார், முனிரத்தினம், சக்திவேல், வினோத்குமார், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies