தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, திமுக பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான எம்.ஏ.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி ஜூன்.1ம் தேதி நாளை மதியம் 1 மணிக்கு, தமிழக முதலமைச்சரும், திமுக கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின் படியும், இளைஞர்களின் எழுச்சிநாயகர் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனையின் பேரில் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் அவர்களின் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தலைமை கழகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கழக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவது குறித்தும், ஸ்ரீபட்டாளம்மன் கோவிலில் நாளை நடைபெறும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளதால் இக்கூட்டத்திற்க்கு கிளைக் கழகச் செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மாரண்டஅள்ளியில் நாளை நடைபெறும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்க்கு தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு.
மே 31, 2024
0
Tags
.gif)

