Type Here to Get Search Results !

5வது மைல்கல் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.


தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா அவர்களின் உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனையை அறவே ஒழிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார்  இணைந்து தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


இதன் தொடர்ச்சியாக  பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றிய  உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பாலக்கோடு அடுத்த 5 வது மைல்கல் பகுதியில்   உள்ள   மளிகை கடையில்  ஆய்வு செய்த போது, ஒரு கடையில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை  பறிமுதல் செய்து கடைக்கு  சீல் வைத்து   25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies