தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் நடத்தப்படும் மகாபாரத நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது, இதனை பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள், கூலி தொழிலாளிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து சில மர்ம நபர்கள் பணம் வைத்து நடத்தப்படும் லங்கர் கட்டை சூதாட்டத்தை நடத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இரவுக்கு பல லட்சம் ரூபாய் சூதாட்டத்தில் புழங்குவதால், சில சமூக விரோதிகள் காவல்துறையில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகளை சரிக்கட்டி, பணம் பறிக்கும் சூதாட்டம் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் பணம், தங்கநகை, இருசக்கர வாகனம், சைக்கிள், வீட்டில் உள்ள விலை உயர்வு பொருட்கள் , தட்டு முட்டு சாமன்கள் உள்ளிட்டவை வரை இழந்து,ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இதே நிலை நீடித்தால் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவது மட்டுமின்றி கடனாளிகளாக மாறி தற்கொலைகள் நிகழ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூதாட்டத்தால் கிராமபுறங்களிலுள்ள ஏழை, பாமர மக்கள் பணத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்படுவதால், லங்கர் கட்டை சூதாட்டத்தை தமிழக அரசு தடை விதிக்கவும், காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)


