மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வகுப்பறை கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசம் திட்டம் தொடங்கினர், நல்லம்பள்ளி, தருமபுரி நகரம் என பல பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசும் பணியை செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறை கரும்பலகைக்கு வண்ணம் பூசப்பட்டது இதில் பிக்கம்பட்டி, கொட்லுமாரம்பட்டி, சின்னப்பெரமனூர், பெத்தம்பட்டி, அரங்காபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வகுப்பறை கரும்பலகைக்கு வண்ணம் பூசப்பட்டது.
இந்த நிகழ்வில் ரியர் தாமோதரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், விஜயகாந்த், சபரிமுத்து ஆகியோர் இணைந்து கரும்பலகைக்கு வண்ணம் தீட்டினர்.