தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் (வயது.70) நேற்று முன்தினம் காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார், அப்போது அருகில் இருந்த காட்டு பகுதியில் இருந்து உணவு தேடி தீத்தாரஅள்ளி கிராமத்திற்க்குள் வந்த ஒற்றை காட்டு யானை வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த முதியவரை மிதித்து கொன்றது.
இதையறிந்த முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன் அவர்கள் கிருஷ்ணன் வீட்டிற்க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, துக்கம் விசாரித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
அது சமயம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், வக்கில் கோபால், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, பாலக்கோடு ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.