Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே ஜோசியம் பார்ப்பதாக கூறி தங்க நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த தம்பதியினர்- உடனடியாக மீட்ட போலீசார்.


மாரண்டஅள்ளி அடுத்த இராசிக்குட்டை கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சரவணன் இவரது வீட்டிற்கு நேற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த  அண்ணாமலை (வயது.46) வள்ளி (வயது.38) தம்பதியானர்  ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டிற்கு வந்தனர்.

அப்பொழுது சரவணன் மனைவி புஷ்பாவை நீஙகள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளதாகவும் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியேற  பரிகாரம் செய்வதாகவும் கூறியவர்கள், முதலில் இருவரும் கை கால்களை கழுவி வரும்படி கூறியுள்ளனர். சரவணன் மற்றும் புஷ்பா இருவரும் கை கால்களை கழுவுவதற்காக வீட்டிற்கு பின்புறம் சென்ற பொழுது, வீட்டின் பீரோவில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், 3 கிராம் வெள்ளி மோதிரம், ரொக்கம் 7500 ரூபாய் ஆகியவற்றை அண்ணாமலை மற்றும் வள்ளி ஆகிய இருவரும் திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். 


திரும்பி வந்து பார்த்த சரவணனுக்கு பரிகாரம் செய்வதாக கூறி  நகை பணம் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து  சரவணன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய  மாரண்டஅள்ளி போலீசார்  இராயக்கோட்டை சாலையில் டி.வி.எஸ்.மொப்ட்டில் சென்று  கொண்டிருந்த அண்ணாமலை, வள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து தங்க  நகை மற்றும் ரொக்கத்தை மீட்டு சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து  தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies