Type Here to Get Search Results !

பாலக்கோடு பைபாஸ் சாலையில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பழ வியபாரி சம்பவ இடத்திலேயே பலி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்தவர் அயுப் (வயது.55) இவர் பாலக்கோடு பைபாஸ் சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை 10 மணியளவில் அயுப் டீ குடிப்பதற்காக கடையில் இருந்து தனது மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.


அப்போது பாலக்கோடு அருகே கொட்டாப் பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த  மோட்டார் சைக்கிள் அயுப் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது, இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அயுப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


மேலும் பலத்த காயமடைந்த சிறுவனை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies