தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணை மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு இண்டூர் பவர்கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் சமூக பொறுப்பு நிதி 2023-2024-ன் கீழ் ரூ.67.94 இலட்சம் மதிப்பீட்டில் அதி நவீன மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் இன்று (03.05.2024) வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் பவர்கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் சார்பாக சமூக பொறுப்பு நிதி 2023- 2024-ன் கீழ் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 67 இலட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அதி நவீன அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் பவர்கிரிட் கார்பரேசன் தலைமை பொது மேலாளர் (மனிதவள மேலாண்மை) பெங்களுரு திரு. மதிலேஸ்குமார், தருமபுரி மூத்த உதவி பொது மேலாளர் திரு. மா.பாலு ஆகியோர் வழங்கினர்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.சாந்தி, பென்னாகரம் மருத்துவ அலுவலர் மரு.கனிமொழி, பாலக்கோடு மருத்துவ அலுவலர் மரு.பாலசுப்பிரமணி, மருத்துவர்கள் மற்றும் பவர்கிரிட் கார்பரேசன் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.