Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே இரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள்.


பாலக்கோடு அடுத்த  ஜோதிஅள்ளி கிராமத்தில் இரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால்  நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள், வெறிச்சோடிய வாக்குசாவடி மையம்.


தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. 


ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை கூட நடத்தவராததால் திட்டமிட்டப் படி ஒட்டுமொத்த கிராம மக்களும்  இன்று நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.


இக்கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மைத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேரும், பெண் வாக்காளர்கள் 668 பேரும் என மொத்தம் ஆயிரத்து 436 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகதது குறிப்பிடதக்கது. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் ஆதங்கம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies