கோடை காலங்களில் குடிநீர் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஏப்ரல், 2024

கோடை காலங்களில் குடிநீர் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (25.04.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து எவ்வித புகாருமின்றி சீராக வழங்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், குடிநீரை முறையாக பயன்படுத்தவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி குடிநீர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊரக மற்றும் நகர் பகுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டித்திடவும் / முறைப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், குடிநீர் தட்டுப்பாட்டை உடனுக்குடன் சரிசெய்ய பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


மின் விசைப் பம்புகளில் பழுதோ அல்லது குடிநீர் குழாய் உடைப்போ ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், பழுதடைந்த மின்மோட்டார்கள் மற்றும் குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மண்டல அலுவலர்கள் அனைத்து பகுதிகளிலும் நேரில் கள ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் செயலாற்ற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


மேலும், பாராளுமன்ற பொது தேர்தல் முடிவடைவதற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளின் நிலுவை குறித்து கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் திருமதி.புவனேஷ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.