Type Here to Get Search Results !

தருமபுரி அருகே கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த குழந்தையை அடித்து கொன்ற காள்ளகாதலன். இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை.


தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்த முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த  பாலச்சந்தர் பிரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயதுடைய சஸ்வந்த் மற்றும் 4 வயதில் தர்ஷன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். பாலச்சந்தர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் ஓசூரில் தங்கி பாலச்சந்தர் வேலை பார்ப்பதால் பிரியா இதே பகுதியைச் சேர்ந்த  வெங்கடேசன் (23) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

இதனை குழந்தைகள் யஸ்வந்த், தர்ஷன், ஆகியோர் அடிக்கடி பார்த்துள்ளனர். இதுகுறித்து பிரியா, வெங்கடேஷிடம் தனது கணவரிடம் குழந்தைகள் கூறி விடுவார்களோ! என்று சொல்லி உள்ளார். இதையடுத்து இன்று வெங்கடேசன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு குழந்தைகளையும் பலமாக தாக்கி அங்குள்ள ஒரு பாறையில் தலையை மோதியுள்ளார். இதில் குழந்தைகள் படுகாயம் அடைந்து மயங்கி உள்ளனர். 


குழந்தைகள் இருவரும் இறந்து விட்டனர் எனக் கருதிய வெங்கடேசன் மேலும் மோப்பநாய்களிடம் இருந்து தன்னை தப்பிக்க கொலை செய்த இடத்தில் மிளகாய்பொடி தூவி கொலையாளி முயற்சி செய்துள்ளார். உடனடியாக அங்கிருந்து கிராமத்திற்குள் வந்து குழந்தைகளை மர்ம நபர்கள் நான்கு பேர் கடத்திச் சென்றார்கள். என கூச்சலிட்டு உள்ளார். இதைக் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்று பார்த்த போது குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளனர் இதையடுத்து குழந்தைகளை மீட்ட அப்பகுதி மக்கள் தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தர்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஸ்வந்தை ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 


தகவலறிந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் வெங்கடேசன் பிரியா ஆகியோரை அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் காரணமாக கள்ளக்காதலுனுடன் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies