Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு கடைவீதி மற்றும் நகர் பகுதியில் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டன.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வணிக நிறுவனங்களின் மூலம் சுமார் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்துவதாக கூறி பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், பெல்ரம்பட்டி சாலை, காவல் நிலையம், தக்காளிமண்டி, வட்டாட்சியர் அலுவலகம், புறவழிச்சாலை 4 ரோடு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் அதிநவீன கேமராக்களை கடந்த ஒரு ஆண்டிற்க்கு முன்பு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம்  திறந்து வைத்தார். 

ஆனால் சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய் சீரமைப்பு பணியின் காரணமாக  இந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியும்,  செயலிழந்து  காட்சி பொருளாகி உள்ளது குறித்தும், மேலும் நகரத்தில் திருட்டு, கொள்ளை, போக்குவரத்து நெரிசல், வாகனவிபத்து உள்ளிட்டவைகளை கண்டறியும் வகையில் ழுழுகட்டுப்பாட்டு அறை பாலக்கோடு காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவும் பழுதாகி செயல் இழந்து காட்சி பொருளாக  உள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திகள் வெளியாகின, அதனை தொடர்ந்து, இன்று மாலை காவல் நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் செயலிழந்த கேமராக்கள் சரி செய்யப்பட்டதால், பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies