அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் கோபிநாதம்பட்டி கீரைப்பட்டி அனுமன்தீர்த்தம் தீர்த்தமலை அரூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் கோடை வெப்பத்தால் பொதுமக்களை காக்கும் வகையிலும் அமமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமமுக தலைமை நிலைய செயலாளரும் மாவட்ட செயலாளருமான டி.கே.ராஜேந்திரன் அமைப்பு செயலாளரும் ஆட்சி மன்ற குழு தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட துணை செயலாளர் எம்ஏ.ஏகநாதன் ஒன்றிய செயலாளர்கள் ஓம் சக்தி கண்ணதாசன் அறிவழகன் தரணிராஜ் வடமலை அரூர் நகர செயலாளர் தீப்பொறிசெல்வம் வழக்கறிஞர் ராஜா மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.