தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை கிராமத்தில் இரண்டு கடைகளின் கதவை உடைத்து அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது, இதில் முத்து என்பவரின் டீக்கடை கடையில் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் கவிமணி என்பவரின் சொட்டு நீர் பாசனம் கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.
இது குறித்த தகவல் அறிந்து வந்த மதிகோன்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றார், இரண்டு கடைகளில் திருடு போனதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.