பேளாரஅள்ளி கிராமத்தில் மழைவேண்டி மஹாபாரத சொற்பொழிவு - துரியோதனன் படுகளம், வெகு விமர்சையாக கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஏப்ரல், 2024

பேளாரஅள்ளி கிராமத்தில் மழைவேண்டி மஹாபாரத சொற்பொழிவு - துரியோதனன் படுகளம், வெகு விமர்சையாக கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி  மண்டு வளாகத்தில் மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமையில் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. 

மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்து கலைஞா்களை  கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.  மஹாபாரத கதைகளை பகலில்  வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார், அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப  இரவில்  கூத்து கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள், மஹாபாரத சொற்பொழிவில் கடைசி நாளான  இன்று 18 ம் நாள், 18ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனனை பாண்டவர்கள் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக  நடைபெற்றது. 

  

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, மந்திரி கவுண்டர்,  ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை  சுற்றுவட்டார கிராமங்களை  சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->