தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி கூட்ட அரங்கில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், பாலக்கோடு கிளை சார்பில் 75 வயது கடந்தவர்களுக்கு பாராட்டு விழா, கிளை தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொருளாளர் வெங்கட்டன் வரவேற்புரை ஆற்றினார் இவ்விழாவிற்க்கு மாவட்ட தலைவர் பசுபதி, மாவட்ட துணை தலைவர் ரஹீம், கிளை துணை செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீவித்யாமந்திர், மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோவிந்தராஜீ, வணிகர் சங்க தலைவர் முத்து, பொருளாளர் சரவணன், ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் கிருஷ்ணன், டாக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு 75 வயதை கடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் சேவைகளை நினைவு கூர்ந்து, நினைவு பரிசு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.