12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று துவக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயின்ற 300 மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயின்ற 300 மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (23.04.2024) துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- பள்ளி மாணாக்கர்கள் தாழ்வு மணப்பாணைமை இல்லாமல் பயில வேண்டும், 11ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் மீண்டும் தன்னம்பிக்கையுடன் படித்து தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்வி பயில வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு உதவிதொகைகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, போட்டித்தேர்வில் முன்னுரிமைகள் போன்ற பல்வோறு அரசு சலுகைகள் வழங்கப்பட்டுவருகிறது. இவ்வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள SC/ST மாணாக்கர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மருத்துவம், UPSC, IIT, விவசாயம் மற்றும் பல துறைகள் பற்றியும், மேலும் உயர் கல்வி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை திட்டம் பற்றியும் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட ஐயம் தொடர்பான கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 12-ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பட்ட/பட்டய பாடப்பிரிவுகள் குறித்து விரிவான விளக்கத்தினை மாணவர்களுக்கு உத்வேக பேச்சாளர், உயர்கல்வி வழிகாட்டுபவர் விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள், உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கூறும் ஆலோசனையை கேட்டு உயர்கல்வி பயின்று அரசு உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் அமீத், பழங்குடியினர் நல அலுவலர் திரு.பி.எஸ்.கண்ணன், தனி வட்டாட்சியர் (ஆதிந) திருமதி.வள்ளி, உத்வேக பேச்சாளர் திரு.ஸ்டாலின் ராஜா, உயர்கல்வி வழிகாட்டுபவர் திரு.இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.குமரேசன், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குநர் திரு.பிரேம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.