புகாரில் அமானி மல்லாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளில் தொடர்ந்து நொரம்புமண், மணல் திருடி வருவதால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழாக சென்று விட்டதாகவும் இதனால் குடிக்க கூட தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும், எனவே சட்ட விரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதே பகுதியை சேர்ந்த மணல் ரவி, சதீஷ், மருது, பிரகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து மண், மணல் திருட்டை கட்டுப்படுத்த வேண்டும் என 10க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் இதுவரை அவர்கள் மீது மாரண்டஅள்ளி காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இவர் கொடுத்த புகார் சம்மந்தப்பட்ட கும்பலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் பொன்னுசாமியை பழிவாங்க 10ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஜீவா (வயது.16) என்ற சிறுவனை நேற்றிரவு டியுசன் முடித்துவிட்டு வரும் போது ரவி, மருது, பிரகாஷ், சதிஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் மண்டை உடைந்து மயங்கிய நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார். தகவலறிந்த சிறுவனின் தந்தை பொன்னுசாமி மகனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மணல் திருட்டு தட்டி கேட்டதால் சிறுவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
