இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆங்கில கவிஞரும், ஆராய்ச்சி ஆலோசகருமான முனைவர் மனு மங்காட், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியை முனைவர் புவனேஸ்வரி மற்றும் முனைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி ஆகியவற்றில் தற்போதைய நிலைகளை பற்றியும் இவற்றில் நவீன கால தாக்கம் பற்றியும் வெகு சிறப்பாக எடுத்துரைத்தனர்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் (பொ) அவர்கள் தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றும் இந்த பயிற்சி பட்டறைக்கான நோக்கம் பற்றியும் ஆங்கிலத்துறை தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் அவர்கள் பேசினார். இறுதியாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா நன்றியுரை ஆற்றினார். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கெளரவ விரிவுரையாளர்களான மீனா, சரண்யா, முதுகலை மாணவ-மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணாக்கர்களான சமீர், பெருமாள், பழனிச்சாமி ஆகியோர் செய்து இருந்தனர். இந்த நிகழ்வை ஆராய்ச்சி மாணவி அஸ்வினி தொகுத்து வழங்கினார்.