Type Here to Get Search Results !

டேராடூன் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்க்கை அறிவிப்பு.


டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2025, பருவத்தில் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01- ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. 

இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதள முகவரியான www.rimc.gov.in பார்க்கவும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies