Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 3 லட்சத்து ஆயிரத்து 500 பறிமுதல்


பென்னாகரத்தின்  உரிய ஆவணங்கள்இல்லாமல் கொண்டு சென்ற ரூ  3லட்சத்து 2 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.இதில் அதிகாரிகள் போலீசார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்று உள்ளனர்.



இந்த பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதனையிடுகிறார்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும்பணம் போன்றவற்றை பறிமுதல் செய்துநடவடிக்கை எடுத்து வருகிறார்கள்


இதேபோல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமரை பிரிவு சாலையில் நிலையான  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்த வழியாக வந்த ஆட்டோவில் வரகூரான் கொட்டாயை சேர்ந்த வீரமணி என்பவர் தான் கட்டிய மாதாந்திர சீட்டுத் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி ரூ 3 லட்சத்து 2 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல்அலுவலர்கள் நர்மதா, சுகுமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies