தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மாரண்டஅள்ளி அடுத்த பெல்லு அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படியாக கையில் சாக்கு பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் பையில், 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது, விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழ் (வயது. 23) என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
பெல்லுஅள்ளி கிராமத்தில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் . கூலி தொழிலாளி கைது செய்து சிறையிலடைப்பு.
மார்ச் 23, 2024
0
Tags
.gif)

.jpeg)